உலக  சினிமா  ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் படம் பாகுபலி 2. இந்த படம் இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் திடீரென கன்னட அமைப்பினர் சிலர் ஒன்பது வருடங்களுக்கு முன்பு காவிரி பிரச்சனைக்காக சத்யராஜ் பேசியதை வைத்து தற்போது இத்திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் நேற்று வெளியிட்ட வீடியோவில் ” நான் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்களின் மனம் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும் அந்த சில வார்த்தைகளுக்காக 9 வருடங்களுக்கு பிறகு நான் கன்னட மக்களிடம் என் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ்,போராட்டம் கை விடப்படுவதாக அறிவித்துள்ளார் , இதனை அடுத்து பாகுபலி 2 இம்மாத 28ஆம் தேதி ரிலீஸ்  ஆக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *