பிபாஷா பசுவுக்கு 2 முறை விவாகரத்தான நடிகருடன் திருமணம்

| Thursday, April 7, 2016, 11:38 [IST] |

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், நடிகர் கரண் சிங் குரோவருக்கும் வரும் 30ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

Bipasha Karan Singh Grover Wedding Date 01

பாலிவுட் கவர்ச்சி நடிகை பிபாஷா பாசுவும், நடிகர் ஜான் ஆபிரகாமும் 9 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ பிபாஷாவும், ஜானும் பிரிந்துவிட்டனர். ஜான் பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டு  செட்டிலாகிவிட்டார்.

 

ஜான் ஆபிரகாமை பிரிந்த பிபாஷா நடிகர் ஹர்மன் பவேஜாவை காதலித்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. ஆனால் இந்த காதலும் பிரிவை சந்தித்தது.

கரண் சிங் குரோவர் படத்தில் சேர்ந்து நடிக்கையில் பிபாஷாவுக்கும் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆன கரண் சிங் குரோவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.  கரண் பிபாஷாவை விட 3 வயது சின்னவர். இதெல்லும் பாலிவுட்டில் ஒரு பெரிய பிரச்சனையே இல்லை, ஏற்கனவே பல பிரபல நடிகைகள் தங்களை விட சிறியவர்களை திருமணம் செய்துள்ளனர்.
தற்போது கரண், பிபாஷா திருமணம் வரும் 30ம் தேதி நடக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags: ,

Related Posts