RSSIndian Cinema

2.o படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட மிகப் பிரம்மாண்ட விழா

| Wednesday, November 16, 2016, 15:09 [IST] |
2.o படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட மிகப் பிரம்மாண்ட விழா

லைகா புரோட்க்ஷன்ஸின் பெருமைக்குறிய பிரம்மாண்ட படைப்பு, ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் “2.o”. அதி நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் பர்ஸ்ட் லுக் விழா  மும்பையில்  நடைபெறுகிறது. “2.o” உலக திரையுலகமே வியப்போடும் விருவிருப்போடும் எதிர்பார்க்கும் பிரம்மாண்டமான படம். லைகா புரோட்க்ஷன்ஸின் மிக பிரம்மாண்ட தயாரிப்பு, ஷங்கரின் புத்திசாலிதனத்துடன் கூடிய பிரம்மிப்பூட்டும் இயக்கம், ரஜினியின் ஸ்டைல் மந்திரம், அக்‌ஷய்குமார் மற்றும் ஏ.ஆர்.ரஹமான் என பலர் இப்படத்தில் இணைந்ததே இதற்கு காரணம். நவம்பர் 20ம் தேதி 2.o படக்குழு, படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட மிகப் பிரம்மாண்டமான விழா […]

Continue Reading

சென்னை வாசியாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ்

| Saturday, August 6, 2016, 17:18 [IST] |
சென்னை வாசியாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ் அசல் அக்மார்க் மதுரைக்கார தமிழ்பொண்ணு. பிறந்தது மதுரை வளர்ந்ததும் படித்ததும் துபாயில். இருப்பினும் தமிழ் கலாச்சாரமும் அழகும் குறையவில்லை. மிஸ் இந்தியா துபாய் ‘பட்டம்’ வென்ற நிவேதாவின் புகைப்படங்கள் ‘ஒரு நாள் கூத்து’ இயக்குநர் நெல்சன் வெங்கடேஷ் கண்ணில்படவே, அதுவே நிவேதாவின் சினிமா பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழியானது. சினிமா மீது மோகமிருந்தாலும் தான் சினிமாவில் நடிப்பேன், நடிகையாவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது என்கிறார் புன்னகையுடன். “டைரக்டர் நெல்சன் பலபேரை அழைத்து படத்தின் கதாநாயகி தேர்வுக்காக ஆடிஷன் வைத்திருந்தார். அவர்களில் நானும் ஒருவன். இறுதியாக […]

Continue Reading

அமலா பால் உடனான பிரிவு குறித்து இயக்குனர் விஜயின் கடிதம்

| Wednesday, August 3, 2016, 17:09 [IST] |
அமலா பால் உடனான பிரிவு குறித்து இயக்குனர் விஜயின் கடிதம்

அன்பிற்குரிய அனைவருக்கும், சில நாட்களாகவே நானும், அமலாவும் பிரிவது பற்றி வெளிவரும் எண்ணற்ற செய்திகளை நான் படித்து வருகிறேன். ஆனால் அவற்றுள் வதந்திகளும், கற்பனை கதைகளும் தான் மிக அதிகம்.  இந்த தருணத்தில் நான் ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்தி  கொள்ள விரும்புகிறேன். நானும் அமலாவும் பிரிகிறோம்  என்ற செய்தி உண்மை தான், ஆனால் மற்ற எல்லா தகவல்களும் முற்றிலும் பொய்யானது. எங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர்களும், […]

Continue Reading

சிவகார்த்திகேயன் இன்னும் உயர்வார் – விக்ரம் மனம் திறந்து வாழ்த்து

| Wednesday, August 3, 2016, 10:03 [IST] |
சிவகார்த்திகேயன் இன்னும் உயர்வார் – விக்ரம் மனம் திறந்து வாழ்த்து

‘அரிமாநம்பி’  படத்தை  இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ,நயன்தாரா,நித்யா மேனன் நடித்துள்ள  படம்  ‘இருமுகன்’.  இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்துள்ளார். சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.’இருமுகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது இவ்விழாவில் நடிகர் விக்ரம் பேசும் போது  நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் உயர்வார் என்று அவரை பெருமையுடன்  மனதார வாழ்த்தினார்.   தொடர்ந்து அவர் பேசும் போது,, “எனக்கு நேற்றிரவு 3 மணி ஆனாலும்  இவ்விழாவை எண்ணித் தூக்கமே வரவில்லை,  பதற்றத்தைவிட […]

Continue Reading

தெறி பட சர்ச்சையால் கபாலி பாதிக்கப்படும் அபாயம்

| Wednesday, April 20, 2016, 23:04 [IST] |
தெறி பட சர்ச்சையால் கபாலி பாதிக்கப்படும் அபாயம்

செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,   கலைபுலி தாணு அவர்கள் என் மீது தனிப்பட்ட பல புகார்களை ஆதாரமில்லாமல் கூறியுள்ளார். இவை அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாகவேண்டும். தெறி படம் செங்கல்பட்டில் வராமல் போனதற்கு தானிவின் பிடிவாதமே காரணம். அவரின் இந்த செயல் கபாலியை பாதிக்கும். கபாலி விவகாரத்தில் தாணு தலையிடாமல் ரஜினிகாந்த் அவர்கள் பேசினால் படத்தை திரையிடுவோம்” என அவர் கூறினார்.

Continue Reading

ரெமோ படத்தில் நடித்ததற்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்

| Tuesday, April 19, 2016, 23:17 [IST] |
ரெமோ படத்தில் நடித்ததற்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது சிவகர்த்திகேயனின் “ரெமோ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை தினமும் வேலை முடிந்த உடன் கொடுத்துவிடுவார்களாம். அப்படி ஒருநாள் கொடுத்த சம்பளத்தை வாங்கிச்சென்ற கே.எஸ்.ரவிக்குமார், படக்குழுவினருக்கு போன் செய்து, இன்றைக்கு நான் 3 மணிநேரம்தான் நடித்தேன், அதற்க்கு முழு நாள் சம்பளம் தேவையில்லை, அரைநாள் சம்பளம் மட்டும் போதும் மீதியை வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றாராம்.   இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா! என படக்குழுவினர் அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். உடனே […]

Continue Reading

தெறி படத்தால் நஷ்டமடைந்ததாக நான் கூறவில்லை – அமீர்

| Tuesday, April 19, 2016, 22:57 [IST] |
தெறி படத்தால் நஷ்டமடைந்ததாக நான் கூறவில்லை – அமீர்

இயக்குனர் அமீர் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வந்து பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தெறி படத்தின் மதுரை விநியோக உரிமையை தான் வாங்கியதாகவும் அதனால் தனக்கு 50% நஷ்டமடைந்ததாகவும், இதற்காக கலைப்புலி தானுவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், அந்த செய்தியில் இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமீர் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளது என்னவெனில், தெறி படம் குறித்து நான் அவதூறு செய்தி வெளியிட்டதாக சில தகவல் வந்ததை நான் அறிந்தேன். […]

Continue Reading

UK-வில் எந்திரனை ஓவர்டேக் செய்த தெறி

| Tuesday, April 19, 2016, 08:28 [IST] |
UK-வில் எந்திரனை ஓவர்டேக் செய்த தெறி

தமிழ்நாட்டில் தியேட்டர் பிரச்சனைகளால் ஓப்பனிங் கலெக்ஷனில் சாதிக்க முடியாவிட்டாலும். அயல்நாடுகளில் பல சாதனைகளை தெறி படித்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் வேதாளத்தை மிஞ்சிய தெறி. UK-வில் எந்திரனை ஓவர்டேக் செய்துள்ளது. எந்திரன் செய்த £277,918 வசூலை, தெறி 4 நாட்களில் £280,696 செய்து ஓவர்டேக் செய்துள்ளது.

Continue Reading

சிவகார்த்திகேயனுடன் 5வது முறையாக இணைந்த அனிரூத்

| Tuesday, April 19, 2016, 08:03 [IST] |
சிவகார்த்திகேயனுடன் 5வது முறையாக இணைந்த அனிரூத்

சிவகார்த்திகேயனுடன் ஹீரோவாக நடித்த எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணாமாக இருந்தது அனிரூத்தின் இசை. தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் “ரெமோ” படத்திற்கும் இவர்தான் இசையமைக்கிறார். அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தில் அனிருத் இணைந்துள்ளார். இதன் மூலம் 5வது முறையாக இவர்கள் கூட்டணி அமைந்துள்ளது.

Continue Reading

நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை சூரியாவின் சென்னை சிங்கம்ஸ் வென்றது

| Sunday, April 17, 2016, 22:24 [IST] |
நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை சூரியாவின் சென்னை சிங்கம்ஸ் வென்றது

தமிழ் திரையுலக நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. அதன் இறுதி போட்டியில் சூரியாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும் ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை சிங்கம்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட் செய்த தஞ்சை வாரியர்ஸ் 84 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.   தொடர்ந்து ஆடிய சென்னை சிங்கம்ஸ் எளிதாக இலக்கை எட்டி கோப்பையை வென்றது.

Continue Reading