ராஜமௌலியின் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் பாகுபலி 2. இதில் நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், நாசர், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் திடீரென கன்னட அமைப்பினர் சிலர் ஒன்பது வருடங்களுக்கு முன்பு காவிரி பிரச்சனைக்காக சத்யராஜ் பேசியதை வைத்து தற்போது இத்திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் நேற்று வெளியிட்ட வீடியோவில் ” நான் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்களின் மனம் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும் அந்த சில வார்த்தைகளுக்காக 9 வருடங்களுக்கு பிறகு நான் கன்னட மக்களிடம் என் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து நடிகர் கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில்

Congrats Mr. Sathyaraj for maintaining rationality in a troubled environement. Quoting VirumaaNdi மன்னிப்புக் கேக்கறவன் பெரியமனுசன். Bravo

— Kamal Haasan (@ikamalhaasan)  April 22, 2017

“மன்னிப்பு கேக்கறவன் பெரியமனுசன் எனவும், சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்த சத்யராஜ்க்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *