ரெமோ படத்தில் நடித்ததற்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்

| Tuesday, April 19, 2016, 23:17 [IST] |

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது சிவகர்த்திகேயனின் “ரெமோ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை தினமும் வேலை முடிந்த உடன் கொடுத்துவிடுவார்களாம்.

Director KS Ravikumar

அப்படி ஒருநாள் கொடுத்த சம்பளத்தை வாங்கிச்சென்ற கே.எஸ்.ரவிக்குமார், படக்குழுவினருக்கு போன் செய்து, இன்றைக்கு நான் 3 மணிநேரம்தான் நடித்தேன், அதற்க்கு முழு நாள் சம்பளம் தேவையில்லை, அரைநாள் சம்பளம் மட்டும் போதும் மீதியை வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றாராம்.

 

இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா! என படக்குழுவினர் அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். உடனே போய் பணத்தை யாரும் வாங்கவில்லை. அவர் விடாமல் அடுத்த நாளும் போன் செய்து, இப்படி சம்பளம் வாங்கியது எனக்கு உறுத்தலாக இருக்கிறது, அதானால் வந்து பணத்தை வாங்கிக்கொண்டே போயாகவேண்டும் என்று சொல்லிக் கட்டாயப்படுத்திப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.

Tags: ,

Related Posts