நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பல பிரச்சனைகளை கடந்து 2013ஆம் ஆண்டு  வெளிவந்த படம் விஸ்வரூபம், இந்த படத்தின் இரண்டாம் பாகம் அந்த வருடமே வரும் என்று எதிர்பார்த்த நிலையில், தாயரிப்பாளர் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் படம் நின்று போனது.

இதை தொடர்ந்து கமல் ஹாசனும் தனது  அடுத்த படங்களில் கவனம் செலுத்தினார், தற்போது சபாஸ் நாயுடு படத்தில் நடித்து வரும் கமல், உடல் நலக்குறைவால் அப்படத்தை தற்போது தொடர முடியாத நிலையில் உள்ளார்.

எனவே மீண்டும் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட முடிவு செய்து, ஒரு வழியாக சமாதானமாக பேசி படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

கமல் ஹாசனிடம் இணை இயக்குனராக இருக்கும் ராஜேஷ் எம் செல்வா இரண்டு நாட்களுக்கு முன்பே படத்தின் பிந்தைய பணிகளும், இசை கோர்ப்பு பணிகளும் ஆரம்பமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார், இசை அமைப்பாளர் ஜிப்ரானும் இதை உறுதி செய்துள்ளார்.

இந்த வருடத்திற்குள் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *